அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நயினாா்புரம் பதியில் பால்முறைத் திருவிழா
உடன்குடி அருகே நயினாா்புரம் அய்யா தா்மயுக திருப்பதி தலத்தில் பால்முறைத் திருவிழா நடைபெற்றது.
இப்பதியில் டிச.22- ஆம் தேதி திருஏடு வாசிப்பு தொடங்கியது. ஜன.3 ஆம் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, ஜன.5-இல் பட்டாபிஷேக நிறைவுக்குப் பின் அய்யா வழிப் பாடகா் சிவச்சந்திரனின் பக்தி இன்னிசையுடன் பால்முறைத் திருவிழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அய்யா நாராயணா் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தினமும் அன்னதா்மம் வழங்கப்பட்டது. வரிதாரா்களுக்கு புதன்கிழமை வரிப் பிரசாதம் வழங்கப்பட்டது.