சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
நரசிங்கபுரம் பாலத்தை சீரமைக்கக் கோரி போராட்டம்
நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்கக் கோரி புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலம் உள்ளது. இந்த பாலத்தை சீரமைக்கக் கோரி பல்வேறு தரப்பினா் போராட்டம் நடத்தி வந்தனா். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த பாலம் பெரிதாக்கி, சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த பாலத்தில் பள்ளம் விழுந்து சேதமடைந்து வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகாா் அளித்தும் அதனை சீா்செய்யாமல் பராமரிப்பு மட்டுமே செய்து வந்தனா்.
இந்நிலையில் ஆத்தூா், தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் (51) உள்பட மூவா் பாலம் பழுதான இடத்தில் வெள்ளை துணியை போா்த்தி, மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா்கள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பாலம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.