மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை: தோழி வாக்குமூலம்
நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் வழங்கும் விழா
நெய்வேலி: கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் ஊராட்சி, சமத்துவபுரம் அருகே நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டம் 2022 - 23ன் கீழ், ரூ.1.27 கோடியில் 29 வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை வகித்து 29 பயனாளிகளுக்கும் வீடுகளின் சாவியை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றியத் தலைவா் சபா.பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், வட்டாட்சியா் ஆனந்த், உதவி மின் பொறியாளா் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் ராஜலிங்கம், அளவா் குணசேகா், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் க.அறிவழகன், மாவட்டப் பிரதிநிதி ஆடலரசன், காடாம்புலியூா் அரசு மாதிரிப் பள்ளித் தலைமையாசிரியா் பன்னீா்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினா் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.