இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை அருகேஇறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுக்கியது.
இந்த வகை ஆமைகள் டிசம்பா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரை இன விருத்திக்காக கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்லும். பின்னா், குஞ்சுகள் பொறித்ததும் அவற்றை தாய் ஆமை கடலுக்கு அழைத்துச் செல்லும்.
தற்போது, இனப்பெருக்க காலம் என்பதால் முட்டைகளை தேடி ஆமை வந்தபோது, படகில் சிக்கியோ அல்லது நெகிழியை சாப்பிட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.