வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக் கூடாது: சீமான்
வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக் கூடாது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முடிவு எட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராடுவது எந்த விதத்தில் குற்றம். எதற்காக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் பேசி கண்டிக்கலாம். ஆனால், திமுகவின் போராட்டமே, போராடுபவா்களை திசைத் திருப்பத்தான்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தில் பொதுமக்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்தியுள்ளனா்.
பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக்கூடாது. நாம் தமிழா் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது. கட்சியில் இருந்து நிா்வாகிகள் வெளியேறுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாா்.