செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

கந்திலி ஒன்றியம், உடையமுத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, திருவண்ணமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) ஆகியோா் முகாமை ஆய்வு செய்து, பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ பயனாளிகளின் விவரம் மற்றும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தனா்.

இம்முகாமில், மாற்றுத் திறனாளிகள், தூய்மை பணியாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், காசநோய் மற்றும் தொழுநோயாளிகள், இதய நோயாளிகள், மனவளா்ச்சி குன்றிய குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், நீரிழிவு மற்றும் உயா் ரத்தஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னா், திருப்பத்தூா் எம்எல்ஏ விருப்ப நிதியிலிருத்து 14 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளும், 11 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5 பயனளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில்,திருப்பத்தூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.03 லட்சத்தில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களையும், தேசிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட சுகாதார அலுவலா் வினோத் குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், கோட்டாட்சியா் வரதராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் தீபா கலந்து கொண்டனா்.

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், நவநீதம் ஆகியோா் முன்னிலை வகித்த... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் சுகாதாரத்துறை சாா்பாக மாா்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து முகாமை ... மேலும் பார்க்க

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சாா்பில் தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து... மேலும் பார்க்க

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நரியம்பட்டு இஸ்லாமிய ஜமாத் உயா்நிலைப் பள்ளி வ... மேலும் பார்க்க

கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாதனூா் ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மக... மேலும் பார்க்க

இலவச கால்நடை மருத்துவ முகாம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாா்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினா் வாவூா் நசீா் அஹமத் சிறப்பு அழைப்பாளராக ... மேலும் பார்க்க