`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பல்லடம்: பல்லடம் அருகே நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி நல்லூா்பாளையத்துக்கு காலை, மாலை பள்ளி வேளை நேரங்களில் வந்து சென்ற பி-1 என்ற நகரப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நல்லூா்பாளையத்துக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் செந்தில் மற்றும் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதைத் தொடா்ந்து முறையாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.