செய்திகள் :

``நவோனியா கும்பலால் சென்னையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்'' - காவல்துறை எச்சரிக்கை

post image

சட்டை பாக்கெட்டில் மொபைல் போனை வைத்துவிட்டு, பஸ்ஸிற்கு காத்திருப்போம்.

பஸ் வந்ததும் முண்டி அடித்துகொண்டு ஏறுவதில், நம் உடைமைகளின் மீது அவ்வளவு கவனம் செலுத்தமாட்டோம்.

பஸ் ஏறியதும் தான், நம் மொபைல் போன் காணாமல் போயிருப்பதைக் கவனிப்போம்.

'பஸ் வரும்வரை மொபைல் போனை பயன்படுத்தி கொண்டிருந்தோமே... அது வந்த அவசரத்தில் தான் பாக்கெட்டில் வைத்துவிட்டு கிளம்பினோம். இப்போது எங்கே?' என்கிற குழப்பம் மேலோங்கிவிடும்.

பிக் பாக்கெட் | நவோனியா கும்பல்
பிக் பாக்கெட் | நவோனியா கும்பல்

இடையில் என்ன நடத்திருக்கும் தெரியுமா?

பஸ் ஏறுவதற்கு கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த போது, அந்த திருடனும் நம்முடனே நின்றிருப்பான். நாமும் ஏறும் அவசரத்தில் எதையும் கண்டுகொள்ளமாட்டோம்.

அவன் நியூஸ்பேப்பர், அட்டை, துண்டு ஆகியவற்றை நீட்டுவதுபோல நீட்டி அல்லது பஸ்ஸில் ஏற முண்டி அடிப்பதைப் போல நடித்து, நியூஸ்பேப்பர், அட்டை, துண்டு மறைவில் அலேக்காக பாக்கெட்டில் இருக்கும் செல்போனை ஆட்டையைப் போட்டிருப்பான்.

இது செல்போனுக்கு மட்டுமல்ல... பணம், உடைமைகள் என எதுவாக இருந்தாலும் இதே டெக்னிக் தான். மேலும், இது பஸ் நிலையம் மட்டுமல்ல... ரயில் நிலையம், மார்க்கெட் போன்ற கூட்டம் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் இதே சம்பவம் நடக்கிறது.

நமக்கு ஏன் தெரிவதில்லை?

இவர்கள் 'நவோனியா' என்று அழைக்கப்படுகிற தொழிற்முறை திருட்டுக் கும்பல் ஆவார்கள். திருடுவதற்கான மிகத் தெளிவான பயிற்சி மற்றும் பக்கா பிளான் இவர்களிடம் இருக்கும். அதனால், இவர்களை நம்மால் அடையாளம் காணமுடியாது.

நவோனியா கும்பல் பெரும்பாலும் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தத் திருட்டில் ஒருவர் மட்டும் ஈடுபடுவதில்லை.

ஒருவர் திருடுவதற்கு, மற்றொருவர் திருடிய பொருளைக் கைமாற்றுவதற்காக 2–3 பேர் குழுவாக செயல்படுகிறார்கள். சில நேரங்களில், இந்தத் திருட்டில் சிறுவர்களையும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பிக் பாக்கெட் | நவோனியா கும்பல்
பிக் பாக்கெட் | நவோனியா கும்பல்

சென்னையில்...

தற்போது இந்தத் திருட்டு சென்னையில் அதிகரித்து வருகிறது. அதனால், கூட்டமான இடங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இவர்கள் பயிற்சி பெற்ற மற்றும் நுணுக்கமான திட்டத்தோடு திருடும் திருடர்கள் என்பதால் இவர்களைக் கண்டறிவது சிரமம் என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

கவனம் மக்களே!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

”நல்ல வாழ்க்கை அமையவில்லை; நாம் ஏன் வாழணும்?”- குழந்தைகளுடன் தவறான முடிவு எடுத்த சகோதரிகள்!

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண... மேலும் பார்க்க

Digital Arrest: 8 நாள்களில் ரூ. 31 லட்சம்; போலி நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஏமாந்தது எப்படி?

சிபிஐ, போலீஸ், நீதிபதி போன்ற பெயர்களைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது என்ற முறையில் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக ஏமாற்றி பணம் பறித்துவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின... மேலும் பார்க்க

சென்னை: "பாசமாகப் பேசுவார்; பணத்தைப் பறிப்பார்" - மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றிய பிரபல திருடன்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பேபி (74). இவரின் கணவர் ஜான்சன், துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். ஜான்சன் உயிரிழந்தநிலையில் பேபிக்கு மாதந்தோறும் பென்சன் ப... மேலும் பார்க்க

போலி ஐ.டி கார்டு, சீருடையில் சென்று மும்பை கடற்படையில் துப்பாக்கியைத் திருடிய நபர் - என்ன நடந்தது?

மும்பை கொலாபாவில் உள்ள நேவி நகரில் கடற்படைத்தளம் இருக்கிறது. இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு மிக்க இடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்து ப... மேலும் பார்க்க

`புலியைப் பிடிக்க மாட்டீங்களா?' - வனத்துறை 10 பேரை புலிக்காக வைத்த கூண்டுக்குள் அடைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த சில நாள்களாக கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்தப் புலியைக் பிடித்து காட்டுக்குள்... மேலும் பார்க்க

கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

``நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க