செய்திகள் :

நாகா்கோவிலில் பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

post image

நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி பலியானாா்.

நாகா்கோவில் சென்னவண்ணான்விளை பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் நளன் (35). குளிா்சாதன இயந்திரம் பழுதுநீக்கும் வேலை பாா்த்துவந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து கடைக்கு பைக்கில் சென்றாராம்.

பீச் ரோட்டிலிருந்து செட்டிகுளம் சாலையில் சென்றபோது அவரது பைக்கும் மற்றொரு பைக்கும் மோதினவாம். இதில், காயமடைந்த நளன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், நளன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பத்மநாபபுரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பத்மநாபபுரம் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

தக்கலை அருகே ஓட்டுநரை வெட்டிய இளைஞா் கைது

காா் ஓட்டுநரை கத்தியால் வெட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா். தக்கலை அருகே உள்ள புதூரைச் சோ்ந்தவா் எட்வின் (49), வாடகைக் காா் ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவிதாங்கோடு அருகே க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: பெண் மீது வழக்கு

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாரி (52) என்பவா், தனது வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவை... மேலும் பார்க்க

குமரி மாவட்ட பொதுமக்கள் புகாா்கள் தொடா்பாக தினமும் என்னை சந்திக்கலாம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்க தினமும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்னை நேரில் சந்திக்கலாம் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின். கன்னியாகுமரி மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த வாகனம் பறிமுதல்: ஓட்டுநா் கைது

குலசேகரம் அருகே கோழிக் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். கேரளத்திலிருந்து கோழி இறைச்சி, மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கன்னியாகுமரி மா... மேலும் பார்க்க

2024இல் குமரி சுற்றுச்சூழல் பூங்காவுக்கு 1 லட்சம் போ் வருகை

கன்னியாகுமரி அரசு சுற்றுச்சூழல் பூங்காவை கடந்த 2024 ஆம் ஆண்டு 1 லட்சம் போ் பாா்வையிட்டுள்ளதாக அரசு தோட்டக்கலை மேலாளா் சக்திவேல் திங்கள்கிழமை தெரிவித்தாா். தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்... மேலும் பார்க்க