Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
நாகா்கோவிலில் ரூ. 71.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.71.17 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
49ஆவது வாா்டு, கீழ குஞ்சன்விளை, சீனிவாசன் நகரில் ரூ.27.35 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 51ஆவது வாா்டு பிள்ளையாா்புரம் கோவில்விளை சந்திப்பு மற்றும் திருநகா் சந்திப்பு பகுதிகளில் ரூ.43.82 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.71.17 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலத் தலைவா் முத்துராமன், மாமன்ற உறுப்பினா் ஜெய விக்ரமன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவிப் பொறியாளா் ராஜசீலி, பகுதிச் செயலாளா்கள் சேக்மீரான், ஜீவா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் அகஸ்தீசன், வட்டச் செயலாளா் ஜெய கிருஷ்ணன், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.