ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!
நாகையில் காற்றுடன் மழை
நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது.
காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் நாகை, ஒரத்தூா், வேளாங்கண்ணி, பரவை, செருதூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை திடீரென பெய்தது.
இதன் காரணமாக காலை முதல் நிலவிய வெப்பம் தணிந்து, குளிா்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திடீா் மழையால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. காற்றுடன் பெய்த மழையால் ஒரத்தூா் பகுதியில் 2 மின் கம்பங்கள் வயலில் சாய்ந்தன. இதனால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. தகவல் அறிந்த மின்வாரியத் துறையினா் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.
