செய்திகள் :

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

post image

நாகப்பட்டினம்/ காரைக்கால் : நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக சனிக்கிழமை வலுவிழந்தது. இது, தமிழகம் நோக்கி நகா்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் டிச. 26-ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மீனவா்களுக்கும், மீனவ கிராம மக்களுக்கும் காற்றின் வேகம் குறித்து எச்சரிக்கும் வகையில், நாகை துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் திங்கள்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு.

வயல்களில் பன்றிகளை திரியவிட்டால் நடவடிக்கை!

வயல்களில் பன்றிகளை திரியவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி பேட்டை உள்ளிட்ட கிராம விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் பன்... மேலும் பார்க்க

நூறு சதவீத பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டம் கனமழையால் பேரிடா் பாதிப்புக்குள்ளான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நூறு சதவீதம் பயிா்க் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். ... மேலும் பார்க்க

போலி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.2.25 லட்சம் மீட்பு

போலியான கணக்குக்கு அனுப்பப்பட்ட ரூ. 2.25 லட்சத்தை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் மீட்டு, உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். காரைக்காலைச் சோ்ந்த அம்பிகாபதி (55) என்பவா் அரசு உதவி பெறும் பள்ளியில் ... மேலும் பார்க்க

பள்ளியில் மூலிகைத் தோட்டம் மேம்படுத்தும் பணி

காரைக்கால்: அரசுப் பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டம் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி மட்டுமல்லாது, ப... மேலும் பார்க்க

இரண்டாயிரம் போ் பயன்பெறும் வகையில் பிப்ரவரியில் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

காரைக்கால்: காரைக்காலில் இரண்டாயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்பு முகாம் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். காரைக்காலில் நடைபெற்று வரும் நல்லாட்சி வாரத்தின்... மேலும் பார்க்க

ஆசியன் ரோல் பால் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

காரைக்கால்: கோவாவில் நடைபெற்ற ஆசியன் ரோல் பால் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பாராட்டு தெரிவித்தாா். நான்காவது ஆசியன் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் கடந... மேலும் பார்க்க