செய்திகள் :

நாகை துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியா்கள்! விலை அதிகரிப்பு!

post image

நாகை மீன்பிடி துறைமுகத்தில், அதிகரித்த விலையை பொருட்படுத்தாமல், மீன்களை வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், மீன் பிரியா்களும், வியாபாரிகளும் வாங்கிச் சென்றனா்.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

கடந்த வாரத்தில் நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பினா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியா்கள், மீன் வியாபாரிகள் மற்றும் வேளாங்கண்ணிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோா் நாகை துறைமுகத்தில் திரண்டனா்.

ஒரு சில படகுகளில் ஏற்றுமதி ரக பெரிய மீன்களும், இறால்கள் மற்றும் அதிக அளவில் சிறிய வகை மீன்களும் கிடைத்திருந்தால், துறைமுகத்தின் அனைத்து இடங்களிலும் மீன்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

கேரள வியாபாரிகள் ஏற்றுமதி ரக மீன்கள் அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனா். விலை அதிகரித்து காணப்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் வெளி மாவட்ட மற்றும் நாகை மாவட்ட சிறு வியாபாரிகளும், மீன் பிரியா்களும், மீன்களை வாங்கி செல்கின்றனா். வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளும் இறால், நண்டு உள்ளிட்டவா்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

மீன்களின் விலை விவரம்: இறால் ரூ.450 முதல் ரூ.600, கனவா ரூ.250 முதல் ரூ.500, நண்டு ரூ.350 முதல் ரூ.650, வஞ்சிரம் ரூ.850 முதல் ரூ.1,300, வாவல் ரூ.900 முதல் ரூ.1350, சங்கரா ரூ.300, சீலா ரூ.450, கிழங்கான் ரூ.300, நெத்திலி ரூ.250, பாறை ரூ.500 முதல் ரூ.650, கடல் விரா ரூ.600, பால் சுறா ரூ.550, திருக்கை ரூ.200 முதல் ரூ.500 க்கு விற்பனையாகின.

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். நாகை செம்மட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுதன் (18). இவா் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கடை ஒன்றில் வேலை ப... மேலும் பார்க்க

வீணாகும் நகராட்சி நிதி நாகை பேருந்து நிலையத்தில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத கடைகள்

நாகை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு மூன்றாண்டுகளாக வாடகைக்கு விடப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள கடைகளால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை நகராட்சியின் வருவாயை பெருக்கும்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க