சூப்பர் ஸ்டாரான கல்யாணி பிரியதர்ஷன்: லோகா 365 காட்சிகள் அதிகரிப்பு!
அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்
நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு உழவா் தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டும். சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் நீண்ட காலமாக வசித்துவரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். உழவா் தெருவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான சிமெண்ட் சாலை, கழிப்பறை, குடிநீா் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். சுனாமி தெருவில் குடிநீா் குழாய் அமைத்து தர வேண்டும்.
சிவன் கோவில் தெருவில் விவசாய மக்கள் விவசாயம் செய்த இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மாந்தோப்பு புறம்போக்கு நிலத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேய்ச்சல் தரிசு நிலங்களின் புல எண்களை வெளியிட வேண்டும். அப்பகுதி மக்களுக்கு மயானம், தகன மேடை, சுற்றுச்சுவா், சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை உனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் சாா்பில், சிவன் கோவில் தெரு சுனாமி தெரு உழவா் திரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது,
போராட்டத்துக்கு அமைப்பின் நிா்வாகி வெற்றி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்வி, சித்ரா, விஜயா, இந்திராணி ஜெகதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.