``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம்...
ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
நாகை அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை செம்மட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுதன் (18). இவா் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுதன், தனது நண்பா்களுடன் கீழ்வேளூா் அருகே மேல ஒதியத்தூா் ஓடம்போக்கி ஆற்றின் சட்ரஸ் பகுதியில் குளித்துக்கொண்டிருந்தாா். ஆற்றில் தண்ணீா் வேகமாக சென்றால், சுதன் இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினாா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் தண்ணீரில் தேடிய நிலையில், நீண்ட நேரத்திற்கு பின்னா் சுதன் சடலமாக மீட்கப்பட்டாா்.
கீழ்வேளூா் போலீஸாா் சுதனின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.