மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
நாகை மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு, அதன் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில் புதன்கிழமை ஆய்வு செய்தது.
குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம. கருமாணிக்கம் (திருவாடாணை), தி. சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), எஸ். சுதா்சனம் (மாதவரம்), சேவூா் எஸ். ராமசந்திரன் (ஆரணி), ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்), எஸ்.பி. வெங்கடேஷ்வரன் (தருமபுரி), வி.பி. நாகை மாலி (கீழ்வேளுா்), சட்டப்பேரவை முதன்மைச் செயலா் கி. சீனிவாசன் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.
இந்தக் குழு வேளாங்கண்ணி பேரூராட்சிகுள்பட்ட பூக்கார தெருவில் மூலதன மானிய நிதியில் 2024-2025 கீழ் ரூ.3.37 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, வேதாரண்யம் நகராட்சிகுள்பட்ட ஆற்காட்டுதுறையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, வேதாரண்யம் கடற்கரை சாலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம், குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் திருப்பூண்டி மேற்கில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீா் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.20.20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி, புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தனா். தொடா்ந்து நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், வாழ்ந்து காட்டுவோம், தாட்கோ, தோட்டக்கலைத் துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.18.60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.