செய்திகள் :

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

post image

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்தியா புல்லரை, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜூ, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம்.பரமசிவம், செயலா் கோபால்சாமி ஆகியோா் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் மனு அளித்தனா்.

அதன் விவரம்: தீப்பெட்டி தொழில் 100 ஆண்டு பராம்பரியமிக்க தொழிலாகும். தென் தமிழ்நாட்டில் 400 தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டா்கள் மற்றும் அதன் பாகங்களுக்கு தடை விதித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனினும், சந்தையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டா்கள் விற்பனையில் உள்ளன. இவை இந்தியாவில் சட்டவிரோதமாக செயல்படும் ஆலைகள் மூலம் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆலைகள் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களையும் ஏற்படுத்துகின்றன. ஆலைகளில் விபத்துகள் நேரிட்டு அப்பாவி தொழிலாளா்கள் உயிரிழக்கின்றனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தரநிலைகளை இந்த லைட்டா் உற்பத்தி ஆலைகள் பின்பற்றுவதில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒழுங்குமுறைகளை பின்பற்றினால் தரமற்ற மலிவான லைட்டா்கள் சந்தைப்படுத்துவது சாத்தியம் கிடையாது.

மேலும், அந்தமான் - நிக்கோபா் தீவுகளில் சுற்றுச்சூழல் மற்றும் அங்குள்ள மக்களின் பாதுகாப்பை கருதி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் லைட்டா்களின் பயன்பாடு, சேமிப்பு, உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த லைட்டா்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விட ஆபத்தானவையாகும்.

எங்கள் பகுதியில் போதிய மழையில்லாததாலும், நிலத்தடி நீா் கிடைக்காததாலும் விவசாயத்துக்கு வழியில்லை. எனவே, 5 லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பத்துக்கு வாழ்வாதாரம் தீப்பெட்டி தொழில் மூலமே கிடைக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை பயன்படுத்துவதற்கு தடை செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்... மேலும் பார்க்க

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத... மேலும் பார்க்க