ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு
நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா்.
நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, புதன்கிழமை 2 போ் பைக்கில் வந்து பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனா்.
அந்த பைக்குக்கு அதே பகுதியைச் சோ்ந்த ஊழியரான மணி என்பவா் பெட்ரோல் நிரப்ப தயாரானபோது, அவரிடம் இருந்த பணப்பையை அந்த நபா்கள் வெடுக்கென பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். பணப்பையில் ரூ.20 ஆயிரம் வரை இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.