செய்திகள் :

``நான் சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன்; ஆனால்'' - நீதிபதி மீது செருப்பு வீசிய வழக்கறிஞர்

post image

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது ஷூவை எடுத்து வீசினார். ஆனால் அந்த செருப்பு தலைமை நீதிபதி மீது படவில்லை.

சனாதனத்தை அவமதிப்பவர்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியபடி இக்காரியத்தைச் செய்தார். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் விஷ்ணு சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கிஷோர், நீதிபதி கவாய்.
கிஷோர், நீதிபதி கவாய்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,''தெய்வீக சக்தியால்தான் இது போன்று நடந்து கொண்டேன். நான் செய்த எனது செயலுக்காக எனது குடும்பத்தினர் வருத்தப்படலாம்.

நான் செய்த செயல் எனது குடும்பத்தினருக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் எனது செயலுக்காக நான் சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன். விஷ்ணு சிலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகளால் என்னால் தூங்கக்கூட முடியவில்லை.

இதுபோன்ற அவமானத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாள் இரவும் நான் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்று என் மனசாட்சி கேட்டுக்கொண்டிருந்தது.

அதோடு மொரீஷியஸில் தலைமை நீதிபதி இந்தியாவின் சட்ட அமைப்பு சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுகிறது, புல்டோசரின் ஆட்சியின் கீழ் அல்ல" என்று கூறியது எனக்கு அவர் மீது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.

தன் மீது செருப்பு வீசிய வழக்கறிஞர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிபதி கவாய் கேட்டுக்கொண்டார். இதனால் சுப்ரீம் கோர்ட் பதிவாளர் இது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை.

அவரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு ராகேஷ் கிஷோரை போலீஸார் விடுவித்துவிட்டனர். ஆனால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

`ரூ.60 கோடி மோசடி வழக்கு' - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து ரூ.60 கோடியை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் 2015ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாகிராமில்தான் முதல் அறிமுகம்'' - சோபிதாவுடன் மலர்ந்த காதல் நினைவுகளைப் பகிர்ந்த நாகசைதன்யா

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு சமந்தா ... மேலும் பார்க்க

விண்வெளியில் ஓர் வீரர் உயிரிழந்தால் என்ன நடக்கும்? - நாசாவின் ரூல்ஸ் இதுதான்!

மனிதன் விண்வெளிக்கு பயணம் செய்யத் தொடங்கியது முதல் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டங்கள் வரை விண்வெளிப் பயணங்களுக்கு என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.ஒருவேளை... மேலும் பார்க்க

15 மனைவிகள்; 30 குழந்தைகள்; விமான நிலையத்தையே வியப்படைய வைத்த தென்னாப்பிரிக்க மன்னர்!àà

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது... மேலும் பார்க்க

300 ஆண்டு பழைமையான ஸ்பானிய கப்பல்; கடலுக்கு அடியில் கிடைத்த ரூ.8 கோடி மதிப்பிலான நாணயங்கள்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைக்கு அப்பால், 30 ஆண்டுகள் பழைமையான ஸ்பானிஷ் கப்பல் சிதைவிலிருந்து சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) மதிப்புள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைத் தொடர்ந்து கும்பிட்ட நிதீஷ் குமார்: `அவருக்கு என்ன ஆச்சு?' - எதிர்க்கட்சிகள் கேள்வி

பீகாரில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை அறிவித்த... மேலும் பார்க்க