செய்திகள் :

நான் பேசுவதே 3 நிமிடம்தான்.. மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வார்களா? - விஜய்

post image

மக்கள் சந்திப்பு பயணத்துக்கு திமுக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இன்று(சனிக்கிழமை) நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய் திமுக அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

விஜய் பேசுகையில், "திருச்சி, அரியலூருக்கு சென்றபோது பெரம்பலூர் செல்லவிருந்தது. ஆனால் செல்ல முடியவில்லை.

சுற்றுப்பயண அட்டவணை போட்டபிறகு சனிக்கிழமை மட்டுமா? என்று பேசப்பட்டது. உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றுதான் வார இறுதி நாள்களில் திட்டமிட்டோம்.

சரி, அடுத்து நம் மக்களை சந்திப்பதற்கு, சொந்தங்களைச் சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்?

அந்த இடத்தில் அனுமதி இல்லை, இந்த இடத்தில் அனுமதி இல்லை என்று ஒன்றுமில்லாத காரணம் சொன்னார்கள்.

அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது, 10 நிமிடம் தான் பேச வேண்டும், நான் பேசுவதே 3 நிமிடம்தான். பேசக்கூடாது என்று சொன்னால் நான் எதைத்தான் பேசுவது?

அரியலூரில் சென்றபோது மின்தடை, திருச்சியில் பேசும்போது ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்.. ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர் மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வீர்களா? செய்துதான் பாருங்களேன். முடியாது அல்லவா? நீங்கள் தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே..

அடுத்து ஒரு கண்டிஷன், பேருந்துக்குள்ளே இருக்க வேண்டும், கையை இவ்வளவுதான் தூக்க வேண்டும். மக்களை பார்த்து சிரிக்காதே, கை அசைக்காதே.. இப்படியெல்லாம் நிபந்தனைகள்..

முதல்வரே, மிரட்டிப் பார்க்கிறீர்களா? மக்களைச் சந்திக்க ஒரு இடம் கேட்கிறோம். ஆனால் நெருக்கடியான இடத்தைத் தருகிறீர்கள். இந்த அடக்குமுறை எல்லாம் வேணாம். அதுக்கு நான் ஆள் இல்லை. மாபெரும் சக்திகளின் பிரதிநிதி.

2026-ல் திமுக, தவெக இடையே மட்டும்தான் போட்டியே. இந்த பூச்சாண்டி வேலைகள் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா, கெத்தா நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள்..

கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா? இல்லை சொந்தமாக உழைத்து சம்பாதித்த நானா?

இப்படியெல்லாம் தடைகள் போட்டால் இனி மக்களிடமே அனுமதி கேட்பேன்" என்று பேசினார்.

TVK vijay speech in Nagapattinam about govt restrictions

இதையும் படிக்க | வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

உங்கள் அப்பா ஊரில் அடிப்படை வசதிகூட இல்லை: திருவாரூரில் விஜய்

திருவாரூருக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தவெக தலைவர் விஜய் பேசுகையில்,``திருவாரூர் தேர் என்றால் சும்மாவா? ரொம்ப நாளாக... மேலும் பார்க்க

தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டு பெருமிதம்!

தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருப்பதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) வெளியிட்டுள்ளதொரு விடியோவில் தெரிவித்திருக்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள... மேலும் பார்க்க

கருவலூரில் கட்டுமானப் பணியில் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு

அவிநாசி அருகே கருவலூர் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில், இரு கட்டட தொழிலாளர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் அருகே உப்பில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,... மேலும் பார்க்க

எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்: விஜய்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

நாகூர் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா... மேலும் பார்க்க

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) தொடக்கி வைத்தார்.பயிற்சியைத் தொடங்கி வைத்த அவர் பயிற்சி நூலை வெளியிட்டதுடன் ... மேலும் பார்க்க