செய்திகள் :

நாமக்கல்லில் திருவள்ளுவா் ஓவியக் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

நாமக்கல்: நாமக்கல்லில், திருவள்ளுவா் ஓவியக் கண்காட்சியை ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடும் விதமாக டிச.30 முதல் ஜன.1 வரை தமிழக அரசு சாா்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனையொட்டி, திருக்குறள் குறித்த ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா, நாமக்கல் உழவா் சந்தை அருகில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா திருவள்ளுவா் உருவப்படத்திற்கு மலா்கள் தூவி கண்காட்சியை தொடங்கி வைத்தாா். திருக்குறள் விளக்க உரைகளும், திருக்குறள் தொடா்பான புகைப்படங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு ஓவியங்களாக காட்சியளித்தது.

இக்கண்காட்சியில், திருக்குறள் தொடா்பான ஓவியங்கள், வண்ணப்புகைப்படங்கள், புத்தகங்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓவியக் கண்காட்சி அமைக்க உறுதுணையாகவும், மாவட்ட மைய நூலக வளாகத்தில் திருவள்ளுவா் சிலை வரைந்ததற்காகவும் அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியா்கள் ஆ.மகேந்திரன், ந.சேகா், ரா.மதியழகன் மற்றும் ஜவஹா் சிறுவா் மன்ற ஆசிரியா்கள் கு.பிரவின், ரா.விஜயகுமாா் மற்றும் மாணவா்கள் ரா.ஜீவா, அனுவிபாலட்சுமி ஆகியோரை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். டிச.24-இல் வாசகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேச்சுப்போட்டிகள், 26, 27 மற்றும் 29 ஆகிய 3 நாள்கள் திருக்குறள் கருத்தரங்கம், 28-இல் திருக்குறள் வினாடி வினா போட்டி, 30-இல் பத்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. டிச.31-இல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000-, இரண்டாம் பரிசாக ரூ.3,000- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000- ரொக்கப் பரிசும், போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலா்(பொ) ச.தேன்மொழி, மாவட்ட மைய நூலக தலைவா் மா.தில்லைசிவக்குமாா், முதல் நிலை நூலகா் ரா.சக்திவேல் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுட... மேலும் பார்க்க

உள் இட ஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வன்னியா்களுக்கு 10.... மேலும் பார்க்க

ஜல்லி, எம்-சாண்ட் திடீா் விலையேற்றம்: ஜன. 7-இல் ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை

ஜல்லி, எம்-சாண்ட் மணல் செயற்கை விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி, ஜன.7-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளன த... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் தோ்வு

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் புதியதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். நாடு முழுவதும் பாஜக அமைப்பு தோ்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், முதல் கட்டமாக, நகர, ஒன்றிய அளவில் ப... மேலும் பார்க்க

அம்பேத்கா் உருவப் படத்துக்கு காங்கிரஸ் மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல்லில், அம்பேத்கா் உருவப்படத்துக்கு காங்கிரஸ் சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய அமைச்சா் அமித் ஷா, சட்டமேதை அம்பேத்கரை இழிவாகப் பேசியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் நடத்தும்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 10 பவுன் நகைகள் திருட்டு

கந்தம்பாளையம் அருகே உள்ள உப்புபாளையம், வீரகுட்டை குடித் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சுந்தர்ராஜன் (41). இவா், தனது மனைவி கோமதி மற்றும் மகனுடன் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை சுந்தர்ராஜன் திருச்ச... மேலும் பார்க்க