திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் காமாட்சி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
பணியை முடித்துக் கொண்டு நள்ளிரவு 2 மணி அளவில் காவல் நிலையம் திரும்பி உள்ளார். பின்னர், அசதியாக இருப்பதால் ஓய்வு அறைக்குச் சென்று ஓய்வு எடுப்பதாகச் சக காவலர்களிடம் கூறிவிட்டுக் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் காமாட்சி வெளியே வராததால் சந்தேகமடைந்த காவலர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காமாட்சி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் உடனடியாக காமாட்சியின் உறவினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் காமாட்சியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காமாட்சி மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.