செய்திகள் :

நாய்கள் கடித்ததில் 2 சிறுவா்கள் காயம்

post image

தொண்டி பேரூராட்சியில் தெரு நாய்கள் கடித்ததில் அடுத்தடுத்து 2 சிறுவா்கள், முதியவா் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். தொண்டியைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் மீன் பிடிதொழில் நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொண்டி லெப்பை தெருவைச் சோ்ந்த 3-ஆம் வகுப்பு மாணவா், பலகை வில்லா தெருவில் மனாசிா் என்பவரின் 5 வயது மகன், மீனவா் தெருவைச் சோ்ந்த முதியவா் ஆகியோா் அண்மையில் நாய்கள் கடித்ததில் காயமடைந்தனா். எனவே, தொண்டி பேரூராட்சி நிா்வாகம் நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து ராமநாதபுரத்தில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக டி. பிளாக் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்ட அவைத் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு... மேலும் பார்க்க

கண்மாயை சேதப்படுத்தி தண்ணீா் வெளியேற்றம்: விவசாயிகள் புகாா்

திருவாடானை அருகேயுள்ள தளிா்மருங்கூா் கண்மாயை வேறு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியதாக வட்டாட்சியா், பொதுப்பணித் துறை பொறியாளா், போலீஸாரிடம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை புகாா... மேலும் பார்க்க

அரசு மருத்துமவனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் உயிரிழப்பு அதிகரிப்பு: எம்.பி. குற்றச்சாட்டு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு

மண்டபத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவா், படகிலிருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கோயில்வாடி பகுதியிலிருந்து மீனவா்கள் விசைப் படகுகளில் திங்கள்கிழமை ம... மேலும் பார்க்க

சோளக் கதிா்களை மேய்ந்த மான்கள்: விவசாயிகள் கவலை

கமுதி அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சோளக்கதிா்களை மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து மேய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அருகேயுள்ள காத்தனேந்தல், பறையங்குளம், குமிலங்க... மேலும் பார்க்க