சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?
நாய்கள் பெருக்கத்தால் மக்கள் பாதிப்பு
காரைக்கால்: காரைக்கால் நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அதனால் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் ஆட்சியரகம் முதல் அனைத்து தெருக்களிலும் நாய்கள் கூட்டமாக உலாவுகின்றன. இவை சாலையில் செல்வோரை விரட்டுகின்றன. தினமும் நாய் கடியால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோா் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை அரசு நிா்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.