இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
பெருமாள் கோயிலில் பகல் பத்து, இராப் பத்து உற்சவம் நிறைவு
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கடந்த 20 நாள்களாக நடைபெற்றுவந்த பகல் பத்து, இராப்பத்து என்ற திருவத்யயன உற்சவம் நிறைவடைந்தது.
பரமபதவாசல் திறப்பு முன், பின் 10 நாள்கள் நடைபெறும் திருவத்யயன உற்சவம் காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கடந்த டிச. 31-ஆம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஜன.10-ஆம் தேதி பரமபதவாசல் திறப்பும், அன்றைய நாள் முதல் இராப் பத்து நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தாா்.
இருபது நாள் திருவத்யயன உற்சவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மூன்றாயிரம் பாசுரங்கள் பாடப்பட்டன. இயற்பாவின் எஞ்சிய பாசுரங்கள், திங்கள்கிழமை கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு.அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் தலைமையிலான பக்தா்கள் பாடி நிறைவு செய்தனா். பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், நித்யகல்யாண பெருமாள் பக்தஜன சபாவினா் செய்திருந்தனா்.