ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்கு...
'நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டாலும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா? - விளக்கும் அவசரக்கால சிகிச்சை நிபுணர்
சென்னை இராயப்பேட்டையில் கடந்த ஜூலை மாதம் நஸ்ருதின் என்பவரை ஒரு நாய் கடித்திருக்கிறது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றவருக்கு ரேபிஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
நாய் கடித்த உடனேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் உயிரிழந்திருக்கிறார் எனும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள அவசரக்கால சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம். இதுதொடர்பாகப் பேசிய அவர், " நாய்கடியில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று இருக்கிறது. இரத்தம் வராமல் நாயின் பல் மட்டும் பட்டிருந்தால் அதனைக் கிரேட் 1 என்று சொல்வார்கள்.
இரத்தம் வந்தால் அதனைக் கிரேட் 2 என்று சொல்வார்கள். நாயின் பல் பதிந்து கொஞ்சம் தசையை மட்டும் கடித்திருந்தால் கிரேட் 3 என்று அர்த்தம். பாதித் தசையைக் கடித்து எடுத்திருந்தால் அதனைக் கிரேட் 4 என்று சொல்வர்கள்.
நாய் கடித்தால் முதலில் சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கிரேட் 1, கிரேட் 2 -வாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் தடுப்பூசி மட்டும் போடுவார்கள்.
ஒரு மாதத்தில் 5, 6 டோஸ் தடுப்பூசிகள் போட வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய் கடித்திருந்தால் 2 டோஸ் போட வேண்டும். தெரு நாய் எதாவது கடித்திருந்தால் 5 முதல் 6 டோஸ் தடுப்பூசிகளை முழுவதுமாகப் போட்டிருக்க வேண்டும்.

தடுப்பூசிகளைப் போட்டப்பிறகு எல்லாம் சரியாகி விட்டதென்றால் ரேபிஸ் டெஸ்ட்டையும் ஒருமுறை எடுத்துப் பார்க்க வேண்டும்.
ஆனால் சிலர் தடுப்பூசிகளையே சரியாகப் போடுவதில்லை. 2 டோஸ் எடுத்துக்கொண்டு அஜாக்கிரதையாக விட்டுவிடுகிறார்கள்.
யாரும் இதனை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. கிரேட் 3, கிரேட் 4 வகை என்றால் முதலில் எல்லாம் தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்கள்.
ஆனால் இப்போது ‘Immunoglobulin’ என்ற விலையுயர்ந்த ஒரு ஊசி இருக்கிறது. அதனைத்தான் போடுவார்கள். அதனைப் போட்டால் நோய் தொற்று பரவாமல் இருக்கும்.
இதனை அந்த நபர் (நஸ்ருதின்) போடாமல் இருந்திருக்கலாம். அதனால் கூட அவர் உயிர் இறந்திருக்கலாம்.
ரேபிஸ் வந்துவிட்டது என்றால், எதைப் பார்த்தாலும் பயப்படுவார்கள். தண்ணீரைப் பார்த்தால் கூட பயப்படுவார்கள். நாய் செய்யக்கூடிய செயல்களைச் எல்லாம் செய்வார்கள்.

நாய் கடித்தவர்கள் சில நாட்களுக்கு அசைவ உணவுகள், காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வீட்டு சாப்பாடை எடுத்துக்கொள்வது மிகச்சிறந்தது" என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், " நாய்கள் அதிகமாக இருக்கும் இடங்களைப் பார்த்தால் கார்பரேஷனிற்கு தகவல் கொடுக்க வேண்டும். முதலில் நாய்க்கு எல்லோரும் சாப்பாடு போடுவார்கள்.
இப்போது உணவு சரியாகக் கிடைப்பதில்லை. அதனால் நாய்கள் வெறியாகி விடுகின்றன. சில கால சூழல் மாற்றங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன” என்று தெறிவித்தார்.