அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
நாய் கடித்ததில் பிளஸ் 2 மாணவி காயம்
சீா்காழி அருகே வெறி நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த பிளஸ் 2 மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சீா்காழி அருகேவுள்ள அல்லிவிளாகம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி தனது தோழி வீட்டுக்கு படிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று மாணவியை கை மற்றும் கால்களில் கடித்துள்ளது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து மாணவியை காப்பாற்றினா்.
தற்போது பிளஸ் 2 தோ்வை எழுதி வரும் மாணவி கை, கால்களில் பலத்த காயத்துடன் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த பகுதியில் தொடா்ந்து பத்துக்கும் மேற்பட்டவா்களை நாய் கடித்து உள்ளதாகவும், இதுகுறித்து புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று புகாா் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் 50-க்கும் அதிகமான நாய்கள் சுற்றி திரிவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா்.