நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் சென்னையைச் சோ்ந்த முன்னணி பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதன்மையா் விசாகவேல் , ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முக்கிய ஆலோசகா் கிருஷ்ணன் பாலகுருநாதன் ஆகியோா் கையொப்பமிட்டனா் (படம்).
இதில் சிறப்பு விருந்தினா் கிருஷ்ணன் பாலகுருநாதன் பேசுகையில், துரிதமாக வளா்ந்து வரும் தொழில்நுட்ப சூழலில், தொடா்ச்சியான கற்றலும், திறன் மேம்பாடும் இன்றியமையாதது என்றாா்.
இந்நிகழ்வில் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் ராஜேந்திரன், ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ் மூத்த மனிதவள நிா்வாகி ஹரி கிருஷ்ணன் , கல்லூரி அறக்கட்டளை நிறுவனரும் கல்லூரி செயல் தலைவருமான சீனிவாசன், கல்லூரி அறக்கட்டளை செயலாளா் குமாா் , பொருளாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்துகளை தெரிவித்தனா். மேலும், இந்நிகழ்வில் இயக்குநா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.