நாளை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து
தாம்பரம் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) காலை 7 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்நேரத்தில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமாா்க்கத்திலும் மின்சார புகா் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. அதேசமயம், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே இருமாா்க்கத்திலும் காலை 6.15 முதல் மாலை 5.05 மணி வரை 20 முதல் 30 நிமிஷங்கள் இடைவெளியில் மொத்தம் 35 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த பின்னா் மாலை 5 முதல் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.