லடாக் போராட்டம்: நேபாளம் - லடாக் இரண்டு போராட்டமும் ஒன்றா? பின்னணி என்ன?
நாளை திமுக செயற்குழு கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் மாளிகையில் அவைத் தலைவா் ஜி.கே.சுபாசு தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் மாவட்ட, மாநகர நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, பகுதி, பேரூா் நிா்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர வட்டச் செயலாளா்கள், ஊராட்சி கிளை செயலாளா்கள், பேரூா் வாா்டு செயலாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இளைஞா் அணியைச் சோ்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூா் அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.