செய்திகள் :

நாளை திருவண்ணாமலை தீபம்; மலையேற்றப்பட்ட கொப்பரை - முன்னேற்பாடுகள் துரிதம்

post image
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான `மகா தீபம்’ நாளை மாலை ஏற்றப்படுகிறது.

இதையொட்டி, நாளை காலை 4 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி சன்னதி எதிரே `ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் `பரணி தீபம்’ ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் முன்பு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு 40 பேர் கொண்ட குழுவினர் தீப மலை உச்சிக்கு கொப்பரையைத் தூக்கிச் சென்றனர்.

மலையேற்றப்பட்ட கொப்பரை

கொட்டும் மழையிலும் நனைந்தபடி அவர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று முழங்கிக்கொண்டே மலை உச்சியை அடைந்தனர். மகா தீபம் ஏற்ற 1,200 மீட்டர் துணியும், 4,500 கிலோ நெய்யும் தயார் நிலையில் இருக்கிறது. 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகா தீபத்தை வணங்குவதற்காக வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக 14,000 போலீஸாரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். 25 தற்காலிக பேருந்து நிலையங்கள், 116 கார் பார்க்கிங் மையங்கள், 95 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 700 கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

கிரிவல பக்தர்கள் இடையூறுகள் இல்லாமல் செல்வதற்காக 500 மீட்டருக்கு 6 காவலர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் கிரிவல பக்தர்களின் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மகா தீபம்

தங்கும் விடுதிகள் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து 3,400 சிறப்புப் பேருந்துகளும், 20 ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் இன்று முதல் வரும் 15-ம் தேதி மாலை 6 மணி வரை திருவண்ணாமலை வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை மாலை ஏற்றப்படும் மகா தீபம் 11 நாள்களுக்குப் பிரகாசிக்கவிருக்கிறது.

தீபத் திருநாளுக்கான சிவ துதிப்பாடல் வரிகள்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது, ‘போற்றித் திருஅகவல்’. இதைச் சொல்லி, ஒவ்வொரு ‘போற்றி’க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம். கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் வரும்போதோ, பிரதோஷ வழிபாட்ட... மேலும் பார்க்க

திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் - வழிபாட்டு முறைகள்

திருக்கார்த்திகைத் திருநாளின் சிறப்பம்சம் தீபவழிபாடு. வீட்டில் மங்காத செல்வத்தையும், மங்கலத்தையும் தரவல்லது தீப வழிபாடு. தீப ஒளி நிறைந்திருக்கும் வீட்டில் தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி க... மேலும் பார்க்க

`தீபம் நிச்சயம் எரியும்; விலை மதிப்பற்ற மனித உயிர்களும் முக்கியம்’ - அமைச்சர் சேகர் பாபு சொன்னதென்ன?

திருவண்ணாமலை ஆன்மிக பூமியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது இயற்கை சீற்றம்.கடந்த 1-12-2024 அன்று கோயில் `தீப’ மலையில் ஏற்பட்ட நிலச்சரிவுக் காரணமாக டன் கணக்கிலான பாறைகளும் உருண்டுவந்து ராஜ்குமார் என்... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: நாளை தேரோட்டம்... கற்பூரம் ஏற்ற தடை - பக்தர்கள் என்ன செய்யலாம், செய்யக்கூடாது?!

அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் வெவ்வேறு அலங்கார வாக... மேலும் பார்க்க

நீங்கள் விரும்பிய வாழ்க்கையைப் பெற... திருவண்ணாமலையில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை - அரச இலை தீப வழிபாடு

நீங்கள் விரும்பிய வாழ்க்கையைப் பெற: திருவண்ணாமலையில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை! அரச இலை தீப வழிபாடு! 2024 டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலய... மேலும் பார்க்க