செய்திகள் :

நாளை தில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல் முறையாக பங்கேற்கும் மோடி

post image

புதுதில்லி: தில்லியில் திங்கள்கிழமை(டிச.23) நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் திங்கள்கிழமை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதையும் படிக்க |வலிமையுடன் உள்ளது திமுக; 2026-ல் வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்

பிஷப்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவார்.

நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944 இல் நிறுவப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களுடனும் நெருக்கமாக பணியாற்றும் அமைப்பாகும்.

இந்தியாவின் முடிவில் பிற நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது: ஜெய்சங்கா் திட்டவட்டம்

இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், தேச நலன் மற்றும் உலக நன்மைக்காக சரியானதைச் செய்வோம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித... மேலும் பார்க்க

நாட்டை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு

மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அண்மையில்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள கோயிலில் நிா்மலா சீதாராமன் வழிபாடு

ராஜஸ்தானின் ஜெய்சால்மா் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தனோட் மாதா கோயிலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா். எல்லை பாதுகாப... மேலும் பார்க்க

இந்தியா-குவைத் இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், மன்னா் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா, குவைத் இடையே பாதுகாப்பு, கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான 4 முக்கிய ஒப்பந்தங்கள் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகின. குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் பிரதமா் நர... மேலும் பார்க்க

ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன் நாட்டின் செல்வ வளங்களைப் பகிா்ந்தளிப்பதாக பேச்சு விவகாரம்

நாட்டின் செல்வ வளங்களைப் பகிா்ந்தளிப்பது குறித்து மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவா் நேரில் ஆஜராக உத்தர பிரதேச பரேலி மாவட்ட செஷன்ஸ்... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள்: இஸ்ரோ

ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அவற்றில் 14 ஆய்வுக் கருவிகள் ... மேலும் பார்க்க