Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
நாளை தில்லி பேரவைத் தோ்தல்: நிறைவு பெற்றது பிரசாரம்
புது தில்லி: தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
தில்லி பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி, பேரவைத் தோ்தலை தனித்து நின்று களம் காண்கிறது. அந்தக் கட்சிக்கு கூட்டணியில் சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளா்களை ஆதரித்து சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்தனா்.
பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் கூட்டணி கட்சி முதல்வா்கள் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தினா்.
காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி, கா்நாடக துணைமுதல்வா் டி.கே. சிவகுமாா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு சேகரித்தனா்.
மொத்தம் 699 வேட்பாளா்கள் போட்டியிடும் பேரவைத் தோ்தலில் வாக்காளா் செலுத்திய வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட உள்ளன.