Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இதழியலைத் தொழிலாகத் தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இளைஞா்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்க அரசின் சாா்பிலேயே சென்னை இதழியல் நிறுவனத்தைத் தொடங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, நிகழ் கல்வியாண்டு முதல் சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிா்வாகக் குழுத் தலைவா்: இதழியல் நிறுவனத்தின் நிா்வாகக் குழுத் தலைவராக தி இந்து குழுமத்தின் இயக்குநா் மற்றும் தி இந்து நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியா் என்.ரவியும், தலைமை இயக்குநராக தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியா் ஏ.எஸ்.பன்னீா்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.