செய்திகள் :

நிகும்பலா ஹோமம்: பிரச்னைகளைத் தீர்த்து நீங்கள் விரும்பியபடி வாழ்வை அருளும் விசேஷ வழிபாடு

post image

அதர்வண வேதத்தில் ஹோமங்கள் மூவகையாக சொல்லப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு சாந்திகம், ஆசைகளை நிறைவேற்றும் பெளஷ்திகம், தீமைகளை ஒழிக்கும் ஆபிசாரிகம் என்பவை அவை. அதில் மூன்றுக்குமான ஒரே ஹோமம் நிகும்பலா ஹோமம் என்கிறது ஆன்மிகம்.

நிகும்பலா ஹோமம்

ஆதி காலத்து மனிதர்கள் வாழ்வில் சூரிய வழிபாடே பிரதானமாக இருந்தது. பிறகு நெருப்பின் பயன்பாடு உணர்ந்து வானத்தில் இருந்த இயற்கை சக்திகள் மற்றும் கடவுளர்களை ஆராதிக்க ஹோமத்தின் வழியே நெருப்பு பயன்படுகிறது. பிறகு ஒவ்வொரு கடவுளர்க்கான விசேஷ ஹோமங்கள் உருவானதும் அதற்கான பல நியம நிஷ்டைகள் உருவாகின.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அப்படி உருவான ஹோமங்களில் சிறப்பானது நிகும்பலா ஹோமம். இதை ஸ்ரீராமரே செய்தார் என ராமாயணம் கூறுகிறது. பாண்டவர்கள் செய்ததாகவும் மகாபாரதம் கூறுகிறது. அரசர்கள் தொடங்கி இன்றைய அரசியல்வாதிகள் வரை எத்தனையோ பேர் இந்த நிகும்பலா ஹோமம் செய்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி இருப்பதாக அறிய முடிகிறது.

அமாவாசை இரவில் உக்கிர தெய்வமான பிரத்யங்கிராவை வணங்கி நிகும்பலா ஹோமம் எனும் மிளகாய் வற்றல் ஹோமம் நடைபெறுகிறது. இதில் காய்ந்த மிளகாய், பூசணிக்காய், வேப்ப எண்ணெய், 108 வகையான அபூர்வ மூலிகைகள், பல வகையான புஷ்பங்கள், 27 நட்சத்திரங்களுக்கு ப்ரீதியான தாவரங்கள் உள்ளிட்ட திரவியங்கள் இடப்படுகிறது. இதனால் பத்ரகாளி, சூலினி துர்கா, பிரத்யங்கரா தேவியை சாந்தப்படுத்தி விரும்பிய வரங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டால் 64 வகையான சாபங்கள், தோஷங்கள், பாவங்கள் தீர்ந்து விரும்பிய பலன் அடையலாம் என ஆன்மிகம் கூறுகிறது.

நரசிம்மரை சாந்தப்படுத்த வந்த சரபரின் நெற்றிக் கண்ணிலிருந்து பிரத்யங்கிரா 1000 சிங்க முகங்கள், 2000 கைகளுடன் வெளிப்பட்டாள். அவளோடு சூலினி துர்காவும் வெளிப்பட்டாள். இருவரையும் சரபேஸ்வரர் இரண்டு இறக்கைகளில் ஐக்கியமாகிக் கொள்கிறார். பிறகு வானில் விஸ்வரூபமாக பறந்து சென்று நரசிம்மரை தனது இறக்கைகளால் அன்புடன் அரவணைத்து கொள்கிறார் சரபர். அப்போது நரசிம்மரின் கோபம் தணிகிறது. இந்த நிகழ்வால் தேவர்களும் மானிடர்களுக்கு அஞ்சி நடுங்க, அவர்களின் அச்சத்தைப் போக்க பிரத்யங்கரா தேவி சிம்ம முக வடிவுடன் எழுந்தருளினாள் என்கிறது புராணம்.

பிரத்யங்கரா தேவி

பிரத்யங்கராவை வணங்கினால் வாழ்வில் அச்சம் என்பதே கிடையாது என்கிறது புராணம். நீங்கள் எந்தவித அச்சத்தில் இருந்தாலும் அவை எல்லாம் நீங்கி நீங்கள் விரும்பிய வாழ்வை அடைய இந்த நிகும்பலா ஹோமம் நிச்சயம் பயன்படும்.

அவ்வகையில் வரும் 12.1.25 ஞாயிற்றுக் கிழமை - ஆருத்ரா அபிஷேக நன்னாளில், மாலை 4.30 மணியளவில், மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. நம் வாசகர்கள் பங்கேற்று பயனடையும் விதம், அற்புதமான ஒரு தலத்தில் இந்த ஹோமம் நடைபெறவுள்ளது. சிதம்பரம் - சீர்காழிக்கு இடையில் 12 கி.மீ. தொலைவில், கொள்ளிடம் அருகேயுள்ளது மேலவல்லம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி ஆலயம். இங்குதான் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வேத காலத்திலிருந்தே இங்கு வழிபாட்டில் இருந்து வந்த சிம்மக்கொற்றவை எனும் இந்த பிரத்யங்கரா தேவி துடியானவள்; தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியவை யாவும் அளிக்கும் வரப்பிரசாதி என்று சிலிர்ப்போடு சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தில் லக்ஷ்மிகணபதி, பாலமுருகன், சுவர்ணாகர்ஷண பைரவர், பத்ராதேவி, குபேரன் சகித குபேரலக்ஷ்மி ஆகியோரும் இங்கே விசேஷ வரமளிக்கும் தெய்வங்களாக அருள்கிறார்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த நிகும்பலா யாகத்தில் சங்கல்பப் பிரார்த்தனை செய்பவர்கள், கலந்துகொள்ளும் அன்பர்களுக்கு அனுப்பப்படும் புனித குங்குமம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை அல்லது பிரத்யங்கிரா தேவியை தியானித்து நம்பிக்கையோடு நெற்றியில் பூசி வரவேண்டும். இதனால் நிச்சயம் 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும். செய்வினை, எதிரிகளால் அச்சம், மரணபயம் உள்ளிட்ட சகல பாதிப்புகளும் நீங்கிவிடும் என்பது விசேஷம்.

நிகும்பலா யாகம்

உங்கள் குறைகள், பயங்கள் யாவும் விலகி இன்பம் சூழ இங்கே இந்த அற்புத வழிபாட்டில் பங்கு கொள்ளுங்கள்.

QR CODE FOR NIGUMBALA HOMAM

QR CODE FOR NIGUMBALA HOMAM

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம்... மேலும் பார்க்க

காஞ்சி மகான் சொன்ன வியதீபாத வழிபாடு; வினைகளைப் போக்கிடும் சிவதரிசனம்

காஞ்சி மகான் சொன்ன வியதீபாத வழிபாடு! வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. வளம் தரும் வியதீபாத தரிசனம் 04.01.2025, சனிக் கிழமை, அத... மேலும் பார்க்க

Christmas: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மதுரை தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி! - Album

கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்... மேலும் பார்க்க

கோவை: மருதமலை, பேரூர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - தேதி வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு

கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பேரூர் பட்டீஸ்வர சுவ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: ஒரு மாதத்திற்குப் பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை - மகிழ்ச்சியில் பக்தர்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 26 வயதுபெண் யானையான தெய்வானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி உதவி பாகர் உதயக... மேலும் பார்க்க

சபரிமலை: குழந்தைகளுக்கு சோறுட்டு முதல் களபம் எழுந்தருளல் வரை... சந்நிதான காட்சிகள்! Photo Album

மலையேற்றத்துக்கு இடையே ஓய்வெடுக்கும் பக்தர்தாகம் தீர்கும் சேவைகுழந்தையுடன் ஐயப்பனை காணபக்தர்கள் கூட்டம்சன்னிதானத்தில் கழபம் எழுந்தருளல்சபரிமலைகுழந்தைகளுக்கு முதல் சோறூட்டும் நிகழ்வுசபரிமலைசபரிமலைசோறூட... மேலும் பார்க்க