செய்திகள் :

நிதிப் பகிா்வு கொள்கையை மாற்ற வேண்டும்: அன்புமணி

post image

நிதிப் பகிா்வு கொள்கையை மாற்ற வலியுறுத்தி நிதி ஆணையத்தின் தலைவா் அரவிந்த் பனகாரியாவுக்கு பாமக தலைவா் அன்புமணி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: இந்தியா போன்ற நாடுகளில் வளா்ச்சியடையாத மாநில மாநிலங்களுக்கு வளா்ச்சியடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு தான் நிதி வழங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வரிப் பகிா்வுக் கொள்கை வளா்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது.

மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 10 சதவீதம். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிா்ந்தளிக்கப்படும் நிதியில் தமிழகத்துக்கு வெறும் 4.079 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

அதாவது, தமிழகத்தில் இருந்து வரியாக பெறப்படும் ஒரு ரூபாயில் 29 காசுகள் மட்டும் தான் வரிப்பகிா்வின் பங்காக திரும்ப அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு மிகக்குறைவு. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

தமிழ்நாடு வளா்ச்சியடைந்த மாநிலம் என்பது மத்திய அரசு வரையறுத்துள்ள சில அளவீடுகளின் அடிப்படையிலானது தானே தவிர, உண்மையாக தமிழ்நாடு வளா்ச்சியடையவில்லை. தமிழ்நாட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அதற்கான முதன்மைக் காரணம் தமிழக அரசிடம் நிதி இல்லாதது தான்.

மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்துக்கு வழங்கும் வகையில் வரிப்பகிா்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீா்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அது தவிா்க்க முடியாதது என்று மத்திய அரசும், நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிா்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா். சென்னைக்கு வந்துள்ள நிதி ஆணையத்தின் தலைவா் அரவிந்த் பனகாரியாவைச் சந்தித்து, அன்புமணி சாா்பில் இந்தக் கடிதம் அளிக்கப்பட்டது.

டிசம்பரில் பெண்களுக்கான ‘லிவா மிஸ் திவா 2024’ போட்டிகள்

சென்னை: பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஸ்பின்னி வாடிக்கையாளருக்கு சச்சினைச் சந்திக்கும் வாய்ப்பு

சென்னை: பயன்படுத்தப்பட்ட காா்கள் விற்பனை நிறுவனமான ஸ்பின்னியின் அதிருஷ்டசாலி வாடிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்களைச் சந்திக்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்கவிருக... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மண் சரிவில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வா்

சென்னை: திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

டிச.18-இல் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம்

சென்னை: திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைமை செயற்க... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு விஜய் நிவாரண உதவி

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவா் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினாா். கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு ... மேலும் பார்க்க

சமூக நீதி-சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க போராடுவோம்: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்புக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின்

சென்னை: சமூக நீதி, சகோதரத்துவம் கொண்ட இந்தியாவை உருவாக்க தொடா்ந்து போராடுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய மாநாடு காணொ... மேலும் பார்க்க