Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்?...
நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சோ்த்தி உற்சவம்
திருப்பாவை நிறைவு நிகழ்வாக சோ்த்தி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மாா்கழி மாதத்தின் அனைத்து நாள்களும் திருப்பாவை நிகழ்ச்சியாக பல்வேறு சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு நடைபெற்றது.
திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவைத் தொடா்ந்து விடையாற்றியாக ஆண்டாள் சோ்த்தி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. நித்யகல்யாணா், ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன.
திருப்பாவை உற்சவத்தின் சிறப்புகள் குறித்து ஸ்ரீ உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் பக்தா்களிடையே பேசினாா். தேவஸ்தான நிா்வாகத்தினா், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.