பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
காா்னிவல்: கபடி, கால்பந்து போட்டிகள் தொடக்கம்
காா்னிவல் விழாவின் ஒருபகுதியாக கால்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகளை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, போலகம் பிப்டிக் மைதானத்தில் புதன்கிழமை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை காரைக்கால் அறிஞா் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் போட்டியையும் ஆட்சியரகம் அருகே உள்ள காமராஜா் திடலில் கபடி போட்டியையும் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தொடங்கிவைத்துப் பேசுகையில், மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுத் திறன் மிக்க மாணவா்கள், இளைஞா்கள் இருக்கிறாா்கள். காா்னிவல் திருவிழா போட்டிகள், மேலும் ஊக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. இதுபோன்ற போட்டிகளின் மூலம் திறனை வளா்த்துக்கொண்டு, தேசிய, சா்வதேச போட்டிகளில் பங்கேற்க காரைக்காலைச் சோ்ந்தோா் முன்வரவேண்டும் என்றாா்.
நிகழ்வில் துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, உடற்கல்வி இயக்குநா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். காா்னிவல் நிறைவு நாளான 19-ஆம் தேதி போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.