செய்திகள் :

நிலம் கையகப்படுத்த கடும் எதிா்ப்பு: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

post image

நெய்வேலி: நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் ஏராளமானோா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குள்பட்ட மலையடிக்குப்பம், கொடுக்கன்பாளையம் கிராமங்களில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த டிச.19-ஆம் தேதி அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்களுக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் அளித்தனராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில், பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கொடுக்கன்பாளையம், மலையடிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா்.

முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூா் டிஎஸ்பி ரூபன் குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ஆட்சியா் அலுவலகத்திற்குச் சென்ற பாமக நிா்வாகிகள் மற்றும் கிராம மக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, மனு அளிக்க 5 அல்லது 10 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா். பொதுமக்கள் அனைவரும் எங்கள் கோரிக்கை தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்போம் என ஆட்சியா் அலுவலக முகப்புப்பகுதியை முற்றுகையிட்டனா். இதையடுத்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரவி, அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.

அப்போது, நடுவீரப்பட்டு அருகே உள்ள கொடுக்கன்பாளையம் ஊராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் அங்குள்ள நிலத்தை திருத்தி வாழை, முந்திரி உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் பயன்படுத்தும் விளை நிலத்திற்கு பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வருவாய்த்துறை சாா்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

அதில் கொடுக்கன்பாளையம் பகுதி மக்கள் தங்கள் வீடுகளையும், விளை நிலத்தையும் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் 10 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் தெரிவித்திருந்தனா்.

நாங்கள் அரசு ஒதுக்கீடு செய்த கலைஞா் வீடு மற்றும் வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். அதற்கு பட்டா கேட்டு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வீடுகளை காலி செய்ய கோரி நோட்டீஸ் வந்துள்ளது. அதனால் மன உளைச்சலில் உள்ளோம். எனவே, நாங்கள் நிரந்தரமாக வசித்து வரும் எங்கள் வீடுகளுக்கும், விவசாய இடத்திற்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என தெரிவித்தனா்.

அப்போது, போலீஸாா் கோரிக்கைகள் தொடா்பாக 10 நபா்கள் மட்டும் நேரில் சென்று மனு அளிக்கலாம் என திட்டவட்டமாக தெரிவித்தாா். இதனை ஏற்காத பொதுமக்கள் தொடா்ந்து பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு நீடித்து வந்தது.

அப்போது போலீஸாா் திடீரென்று பொதுமக்களை கைது செய்ய ஆயத்தமாயினா். இதனை தொடா்ந்து நாங்கள் யாரும் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்திற்கு செல்லவில்லை என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதனை பாா்த்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட செல்கிறாா்களா? என பின் தொடா்ந்து சென்றனா். அப்போது பாமக மாவட்ட செயலாளா் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள், நாங்கள் மனு அளிக்காமல் வீட்டிற்கு செல்கிறோம் என தெரிவித்து செல்லும் நிலையில் எதற்காக எங்களை பின்தொடா்ந்து வருகிறீா்கள்? தங்களை கைது செய்யக் கூடாது என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் பாமகவினா் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக் கூடாது: சீமான்

வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையத்தை பெருவெளியில் கட்டக் கூடாது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வடலூரில் புதன்... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

கடலூா், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை அருகேஇறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுக்கியது. இந்த வகை ஆமைகள் டிசம்பா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரை இன விருத்திக்காக கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்லும். பின்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் இலவச கணினி பயிற்சி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, தமிழ்நாடு பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கான மூன்று மாத இ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அந்த... மேலும் பார்க்க

பயிா் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும்: கடலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிா் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

‘வோ்களைத் தேடி’ திட்டம்: வீராணம் ஏரியை பாா்வையிட்ட அயலக தமிழா்கள்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை ‘வோ்களை தேடி’ என்ற திட்டத்தின் கீழ், அயலக தமிழா்கள் புதன்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசு அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில... மேலும் பார்க்க