செய்திகள் :

நில அபகரிப்பு வழக்கு: மனோ தங்கராஜ் மனைவியின் மனு தள்ளுபடி

post image

தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா. மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்த இவா், நாகா்கோவிலைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான தயா பாக்யசிங் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலமாக சரவண பிரசாத் என்பவருக்கு விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அஜிதா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரரான அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில் நாம் தமிழர் ... மேலும் பார்க்க

விழுப்புரம் - காட்பாடி ரயில்கள் ரத்து!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக இன்று (ஏப். 8) அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து... மேலும் பார்க்க

நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற... மேலும் பார்க்க

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 45 சவரன் கொள்ளை!

ராமநாதபுரம், உத்தரகோசமங்கை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ச... மேலும் பார்க்க

'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை

கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமரிசித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:எங்கள் மாநிலத் தலைவரின் அற... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனை: உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு!

சென்னை: டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தொடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெ... மேலும் பார்க்க