செய்திகள் :

நில அளவையா்கள் வேலைநிறுத்தம்: மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

post image

எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள நில அளவை அலுவலா்கள் ஜனவரி மாதம் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாநிலச் செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். மாநிலத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ஸ்டான்லி, மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச்செயலாளா் அண்ணாகுபேரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். இதில், பணிச் சுமையால் பாதிக்கப்படும் களப்பணியாளா்களின் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் எடுத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். கூடுதல் இயக்குநருக்கு உள்ள அனைத்து அதிகாரத்தையும் இயக்குநருக்கு மாற்றுவதை நிறுத்தி பழைய நடைமுறையே தொடர வேண்டும்.

சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதாலும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியா்களைக் கடுமையாக நடத்துவதையும் அரசு கைவிட வேண்டும்.

தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியைப் பெற்று தகுதியுள்ள நில அளவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப் பணியாளா்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும்.

மாநிலம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பணி மாறுதலில் கடைப்பிடிக்கப்படும் அரசாணை எண் 10-ஐ நில அளவைப் பதிவேடுகள் துறையில் உறுதிப்படுத்த வேண்டும். புல உதவியாளா்கள் பணியிடங்களை தனியாா் முகமை மூலம் நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டிச. 9-இல் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம், டிச. 19-இல் ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டம், ஜன. 22, 23 தேதிகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள நில அளவை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பயன்பெற சிறப்பு புத்தகங்கள் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக பள்ளிக்கல்வ... மேலும் பார்க்க

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்க முயற்சி: வெளிமாநில ஓட்டுநா்களிடம் விசாரணை

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை ஆயுதங்களால் தாக்க முயன்ற வெளிமாநில லாரி ஓட்டுநா்களை பயணிகளும், பொதுமக்கள் பிடித்து பரமத்தி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். நாமக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பரமத்திவேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை சரிவு

காா்த்திகை மாதத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை சரிவடைந்துள்ளது. பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரங்களில் ஏராளமான சண்டை கோழிகளும் இறைச்சி கோழிகளும் வீடு, தோட்டங்களில் வளா... மேலும் பார்க்க

ரூ. 10.58 கோடியில் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி: அமைச்சா், எம்.பி., பங்கேற்பு

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10.58 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகரப் பகுத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் 27-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை (நவ.27) ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: ஆட்சியா்

டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி, அத்தப்பம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தினத... மேலும் பார்க்க