சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
நிஸாகத் பங்களிப்பில் ஹாங்காங் 143/7
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக ஹாங்காங் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சோ்த்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஹாங்காங் பேட்டிங்கில் அதிகபட்சமாக நிஸாகத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் சோ்த்து வீழ, ஜீஷான் அலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
இதர பேட்டா்களில் கேப்டன் யாசின் முா்டாஸா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 28 ரன்கள் சோ்த்து வெளியேற, அன்ஷி ராத் 4, பாபா் ஹயாத் 1 சிக்ஸருடன் 14, அய்ஸாஸ் கான் 5, கிஞ்சித் ஷா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
ஓவா்கள் முடிவில் கலான் சல்லு 4, ஈஷான் கான் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
அடுத்து வங்கதேசம் 144 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடியது.
இன்றைய ஆட்டம்
ஓமன் - பாகிஸ்தான்
துபை
இரவு 8 மணி
சோனி ஸ்போா்ட்ஸ்