செய்திகள் :

`நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா?' - ஆவேசமான பொன்னார்

post image

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொடியேற்றுவிழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில் தலைமையில் முன்னாள் பிரதமர் வாய்பாய் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு நடந்த அந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கோபகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

`முதலமைச்சர் பத்திரிகைகளை படிக்க வேண்டும்’

பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் நடக்கும் குற்றச்செயல்கள் மீதி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது அரசு. மாநிலத்தில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தினமும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு தீர்வு என்ன? அனைத்தையும் சமாளித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு அதை டைவர்ட் செய்து விடுகிறார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருக்க கூடிய பாலியல் குற்றங்கள், திருப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் நடக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.

செய்தித்தாள்களை பார்த்தால் நல்லவிஷயங்களை விட போதை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் இந்த பத்திரிகைகளை எல்லாம் படிக்க வேண்டும். 2026 தேர்தலில் நிச்சயமாக இந்த அரசாங்கம் இருக்காது. இந்த அரசாங்கம் மிகப்பெரிய தோல்வியை அடையும். மக்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சியை பார்த்தால், எல்லா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை விஷயத்தில் மட்டும்தான் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மற்றபடி எல்லா விஷயங்களிலும் அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அதை சரி செய்யும் வகையில் அவர்களால் செயல்படவும் முடியாது. தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக அவர் நடந்து கொண்டிருக்கிறார்.

கொடியேற்று விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன்

பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அந்த துறைகளை சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பள்ளிக்கூடங்களில் இந்தி பயிற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால், அவர்கள் விருப்பப்பட்டு வருகிறார்கள் என்கிறார்கள். இந்தி பிரசார சபா இல்லையா என கேட்கிறார்கள். இந்தி படிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய அமைப்பு அது.  அது மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட அமைப்பு. அது இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று நீங்கள் பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா. அதை நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள். இந்தியை பரப்புவதற்காக தான் நாங்கள் பள்ளிக்கூடங்களில் தொடங்கி இருக்கிறோம் என்று நீங்கள் சொன்னால் உங்களை ரோடு ரோடாக செருப்பு கழற்றி அடிப்பார்கள். முதலில் உங்கள் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுங்கள்.

இன்று தமிழ்நாட்டு மாணவர்கள் உலகை வெல்லும் சக்தி படைத்த மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அந்த வசதி செய்து கொடுப்பது அரசாங்கத்தினுடைய கடமை. அதை செய்ய மாட்டேன் என்று சொன்னால் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும். அப்பா ஸ்தானத்தில் இருந்து நீங்கள் நடக்க வேண்டும். குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுப்பேன் என்பதை மனதில் வைத்து நடந்தால் அது வரவேற்கவேண்டிய விஷயம். இல்லை என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்ச்சி

தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வந்துபாருங்கள் என அண்ணாமலைக்கு உதயநிதி சவால் விட்டிருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள். அண்ணாமலை அல்ல நானே வருகிறேன். எப்போது வர வேண்டும் என நேரம் குறியுங்கள். தமிழக முதல்வர் அவர்களே இது தமிழ்நாடு. 8 கோடி மக்களுக்கும் சொந்தமானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும். அதில் அறிவாலயத்துக்கு முன்னால்  வரக்கூடாது என்றுச்சொன்னால் அது ரெட்லைட் ஏரியாவா. அங்கு வரக்கூடாது எனச்சொல்ல உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். கேவலமான ஒன்று. அந்த வார்த்தைகளை திரும்பப்பெற வேண்டும்.

ஒருபக்கத்தில் குழந்தைகள் அப்பா என அழைப்பதாக சொல்கிறார்கள். சரி சந்தோஷப்படுவோம். எங்கள் பக்கத்தில் வரக்கூடாது என்று சொன்னால் ஜெயலலிதா அம்மாவை இவர்கள் நினைவுகொள்ள வேண்டும். ம.தி.மு.க தொடக்க காலத்தில் அக்கட்சியினர் பெரிய ஊர்வலமாக வந்து, இதே அறிவாலயத்தை தாக்கக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் வரும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா பாதுகாப்பு கொடுத்தார். இன்று அதை மாற்றி எங்கள் ஏரியாவுக்கு வந்துவிடாதீர்கள் என அவர்கள் சொல்கிறார்கள் என்றால். ஒன்று அவர்கள் தவறாக அறிவாலயத்தை நடத்துகிறார்கள் என்று பொருள்படும். சவால் விட்டால் நாங்கள் வருகிறோம். ரெட் லைட் ஏரியா என்பதால் பொன்.ராதாகிருஷ்ணன் வருகிறாரா என அடுத்ததாக ஒரு கேள்வி கேட்பார்கள். இந்த குசும்பு வேலைகள் எல்லாம் வேண்டாம். நீங்கள் சவால் விடுங்கள் நாங்கள் வருகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்" என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

``காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" - சீமான் ஓப்பன் டாக்

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிர... மேலும் பார்க்க

"2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்..." - திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க