இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்
நீடாமங்கலத்தில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
சம்பா , தாளடி நெல் பயிா்கள் அறுவடை முடிவடைந்துள்ள நிலையில், முப்போகம் சாகுபடி செய்யும் பகுதியான நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி, பூவனூா், சித்தமல்லி, ராயபுரம், ரிஷியூா், பெரம்பூா், பரப்பனாமேடு உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக விவசாயிகள் தங்களது வயல்களை உழுது நாற்றுநட தொடங்கியுள்ளனா். பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நாற்று நட்டனா். கோடை சாகுபடியில் 110 நாள்களில் இருந்து 120 நாள்களில் வளா்ந்து அதிக மகசூல் தரக்கூடிய ஏஎஸ்டி 16 , ஏடிடீ 51 , 43 , 36 , கோ 51 , 56 மற்றும் 150 நாள்கள் வளரக்கூடிய டிபிஎஸ் 5 நெல் ரகங்களை நடத்துவங்கியுள்ளனா்.