செய்திகள் :

நீட் தோ்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

post image

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதை சுமாா் 20 லட்சம் மாணவா்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவா்களின் விடைத்தாள் நகல்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை தோ்வா்கள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் வியாழக்கிழமைக்குள் (ஜூன் 5) பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவா்கள் 011-40759000 / 69227700 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது ய்ங்ங்ற்ன்ஞ்2025ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரியையோ தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் இன்று காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்ல... மேலும் பார்க்க

நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று முதல் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி, மாநகர... மேலும் பார்க்க

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாற... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க