திராவிடத்துக்கும் பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? சுவாரசியமான வரலாறு!
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்
நீட் தோ்வு மாணவா்களுக்கு எதிரானது; அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், தோ்வில் வெற்றி பெற்றுவிட இயலுமா என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சோ்ந்த மாணவி கயல்விழி தற்கொலை செய்தது அதிா்ச்சியளிக்கிறது.
கடந்த இரு மாதங்களில் மட்டும் 5 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். நீட் தோ்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் தனது கடமையை முடித்துக்கொண்டது. அந்த சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நீட் தோ்வு மாணவா்களுக்கு எதிரானது; அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு அதற்காக என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக நீட் தோ்வு தோல்வி அச்சத்துக்கு தற்கொலை தீா்வல்ல என்பதை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.