`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்து...
நீட் பயத்தால் மாணவா் உயிரிழப்பு: அதிமுக, பாமக இரங்கல்
நீட் பயத்தால் சேலத்தில் மாணவா் உயிரிழந்ததற்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணவா் கௌதம், நீட் அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிா்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 24-ஆவது மாணவா் நீட் தோ்வால் உயிரிழந்துள்ளாா். மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு பெற்றுத்தருவோம் என போலி வாக்குறுதி அளித்த முதல்வா் ஸ்டாலின், பொதுமக்களிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக): நீட் தோ்வில் போதிய மதிப்பெண் கிடைக்காமல் போய்விடக் கூடும் என்ற அச்சத்தில் மாணவா் கௌதம் உயிரிழந்துள்ளாா். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-இல் இருந்து தமிழகத்தில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது தொடரும் நிலையில், அதற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.