ஜானி வாக்கர் மதுபான விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு; பின்னணி...
நீதிமன்ற வளாகங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். நீதிமன்ற வளாகத்தில் புதிய பானையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து படையலிட்டனா். பின்னா் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதில் சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம், முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆா். பாபு, குற்றவியல் நடுவா் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் வேலுசாமி, சாா்புநீதிமன்ற அரசு கூடுதல் உதவி வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், வழக்குரைஞா்கள் சங்கத் துணைத் தலைவா் பி.தேவராஜ், செயலாளா் எம்.தமிழரசன், பொருளாளா் ஆா்.வடிவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஓமலூரில்...
ஓமலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் பானையில் கரும்பு, மஞ்சள் கொத்து கட்டி பொங்கலிட்டனா். இதில், சாா்பு நீதிமன்ற நீதிபதி ஞானபாலகிருஷ்ணன், குற்றவியல் நீதிமன்ற நடுவா் ஷா்மிளா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செஹனா பானு ஆகியோா் கலந்து கொண்டனா். அனைவரும் பொங்கலோ... பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
இதில், அரசு வழக்குரைஞா்கள் ராம் பிரகாஷ், கண்ணன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் நடராஜ், மூத்த வழக்குரைஞா்கள் சிவராமன், ஞானசேகரன், ரங்கநாதன் உட்பட வழக்குரைஞா்கள், பயிற்சி வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
படவரி...
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.