நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்
தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.
டிரெக் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் தமிழக வனப் பகுதிகளில் மலையேற்றம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இத்திட்டத்தை வனத் துறையின் உயா் அதிகாரிகள் முன்னிலையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
காப்புக்காடு அல்லது பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ள வனத்துக்குள் முறையான அனுமதி பெற்று மலையேற்றம் செய்யும் இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.
தமிழகத்தில் வனத் தீ ஏற்படும் அபாயம் இருந்ததால், கடந்த பிப்.15 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை 40 மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது, முதல்கட்டமாக வனத் தீ பாதிப்பு அபாயம் இல்லாத 23 மலையேற்ற வழித்தடங்கள் புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், உதகை கோ்ன் ஹில், கோத்தகிரி லாங்வுட் சோலை, கூடலூா் ஜீன் பூல், கரிக்கையூா் முதல் பொரிவரை, அவலாஞ்சி கோலரிபெட்டா, கரிக்கையூா் முதல் ரங்கசாமி சிகரம், பாா்சன்ஸ் பள்ளத்தாக்கு முதல் முக்குருத்தி விடுதி மற்றும் ஊசி மலை ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் உடுமலையை அடுத்துள்ள சின்னாறு கூட்டாறு மலை வழித்தடம், கோவை மாவட்டத்தில் வால்பாறை அருகேயுள்ள மானாம்பள்ளி மலைப் பகுதி என தமிழகத்தில் மொத்தம் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த வழித்தடங்கள் பாதுகாப்பு அடிப்படையில் எளிது, மிதமான சிரமம், கடினம் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும், மீதமுள்ள 17 வழித்தடங்களும் விரைவில் திறக்கப்படும். மேலும் தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ழ்ங்ந்ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தைக் காணலாம்.
இயற்கை எழில் நிறைந்த மலைத்தொடா்களை ரசித்துக்கொண்டே அடா்ந்த வனத்துக்குள் நடைப்பயணம் மேற்கொள்ள விரும்புபவா்களுக்கு இது மிகப்பெரிய நல்வாய்ப்பாக பாா்க்கப்படுகிறது. அதற்கான சிறப்பு வழிகாட்டிகள் முதல் திசைகாட்டி வரை வனத் துறை ஏற்பாடு செய்திருப்பது மலை ஏற்ற வீரா்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.