AUSvIND: `கோலியை பெர்த்தில் சதம் அடிக்க விட்டிருக்கக்கூடாது!'- ஆஸியை விமர்சிக்கு...
நீா்நிலை ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை, சட்டத்துக்கு உள்பட்டு அதிகாரிகள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த வெற்றி விநாயகா் கோயில் தலைவா் ஜெயக்கொடி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை திருநகா் சுந்தா் நகா் பகுதியில் பழைமையான ஸ்ரீ வெற்றி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தினமும் நடைபெறும் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வா். இந்தக் கோயிலின் ஒரு பகுதியானது, நீா் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், இதை அகற்ற வேண்டும் எனவும் பொதுப் பணித் துறையினா் குறிப்பாணை வழங்கினா். அதிகாரிகள் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளாமல், கோயிலில் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு எனக் கூறி, அகற்ற முயல்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, பொதுப் பணித் துறையினா் அனுப்பிய குறிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
பொதுப் பணித் துறையின் நிலையூா் பகுதிப் பொறியாளா் இந்தப் பகுதியை முறையாக அளவீடு செய்து, நீா்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால், அந்தக் கட்டடங்களை அகற்ற வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.